Posted on: May 27, 2021 Posted by: Durai Comments: 0
  • பயிராய்வு
  • கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம பணியாளர்களை கண்காணித்தல்
  • அரசுக்கு சேரவேண்டிய நிலவரி, கடன்கள், மற்றும் நிலுவை தொகைகள் முதலியவற்றை வசூல் செய்தல்
  • கிராம கணக்குகளைத் தணிக்கை செய்தல்
  • நில ஆக்கிரமிப்பு செய்ய ‘ஏ’ மற்றும் ‘பி’ நமூனா வழங்கப்பட்ட நிலங்களை பார்வையிடுதல்
  • 2-சி பட்டா வழங்கப்பட்ட மரங்களைத் தவிர அரசு புறம்போக்கில் உள்ள மரங்களைப் பார்வையிடுவதுடன் அம்மரங்களின் வசூல்களை ஆண்டுக்கு ஒருமுறை ஏலம் விடுதல்
  • வட்டாட்சியர்களால் ஆணையிட்ட நேர்வுகளில் (நிலங்களிலுள்ள) ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்
  • இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்ட காலங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்வையிட்டு உணவளிக்க ஆவன செய்துவிட்டு, அக்குடும்பங்களுக்கு உதவித் தொகை கிடைக்க செயற்குறிப்பு அனுப்புதல்
  • முதியோர் உதவித்தொகை நேர்வுகளை சரிபார்த்தல்
  • பட்டா பாஸ் புத்தகங்கள் வழங்குவதை சரிபார்த்தல்
  • பாசன ஆதாரங்களைப் பார்வையிடுதல்
  • கிராமங்களில் மனுநீதித் திட்டங்களில் பங்கேற்றல்
  • கல்குவாரியிலிருந்து கனிமங்கள், மண், மணல், கற்கள் முதலியவை (அனுமதியின்றி) கடத்திச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்துடன், கல்குவாரிகளைப் பார்வையிடுதல்
  • வரிவசூல் சமயங்களில், வரி வசூல் கணக்குகளை தணிக்கை செய்தல்
  • ஆண்டு ஜமாபந்திக்காக, கிராம நிர்வாக அலுவலர்களால் தயார் செய்யப்படும் கணக்குகளைச் சரிபார்த்தல்
  • வாரிசுகளுக்குச் செய்யப்பெற்ற பட்டாமாறுதல்களைச் சரிபார்த்தல்
  • பிறப்பு,இறப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தல்
  • நிபந்தனைகளுடன் கூடிய நில ஒப்படை நேர்வுகளைத் தணிக்கை செய்தல்
  • நிலக் குத்தகை நேர்வுகளைத் தணிக்கை செய்தல்
  • அரசின் பிற துறையினருக்கு மாற்றம் செய்யப்பட்ட அரசு நிலங்களை விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை மீறப்படாமல் உள்ளனவா என்பதனைச் சரிபார்க்கப் பார்வையிடல்
  • அனுபவத்தில் உள்ள நேர்வுகளைச் சரிபார்த்தல்
  • வனக் குற்றங்களைக் கண்டுபிடித்து அறிக்கை அனுப்புதல்
  • முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது தேவையானவற்றை ஏற்பாடு செய்தல்
  • தண்ணீர் தீர்வை விதிக்கப்படும் இனங்கள், மரப்பட்டா வழங்கப்பட்ட இனங்கள், அவர்க்குச் சொந்தமான கோப்புகள், இவைகளைப் பார்வையிடல்
  • கிராமக் கல் கிடங்கினைப் பார்வையிடல்
  • எல்லைக் கற்களைப் பார்வையிடல்
  • களப் பணியின்போது ஆற்ற வேண்டிய பிற பணிகள்:
    1. மரங்களை மதிப்பிடல்
    2. நிலங்களை கடனளிப்பதற்க்காகவோ, நில ஒப்படை செய்வதற்காகவோ பார்வையிடல்
    3. அரசளித்த கடனுதவியால் வெட்டப்பட்ட கிணறுகளை பார்வையிடுதல்
    4. கால்நடைப் பட்டிகளைப் பார்வையிடுதல்
    5. ஒப்படை செய்யப்பட்ட நிலங்களை விற்கும்போது உடனிருத்தல்
    6. சீறிய நீர்ப்பாசன திட்டங்களைப் பார்வையிடுதல்
    7. உள் விவகாரங்கள் தொடர்பான

Leave a Reply