Posted on: April 20, 2020 Posted by: Durai Comments: 5
அமைப்பு சாரா தொழிலாளர்கள் கொரோனா நிவாரண நிதி

2020 ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று அரசு அளித்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் நிவாரணத் தொகையாக ரூபாய் ஆயிரம் (1000 Rs) வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்திருக்கிறார்கள்.

அமைப்பு சாரா தொழிலாளர்கள் கொரோனா நிவாரண நிதி
அமைப்பு சாரா தொழிலாளர்கள் கொரோனா நிவாரண நிதி

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் என்ன என்ன உள்ளது என்று பார்த்தால்

  1. சலவைத் தொழிலாளர் நலவாரியம்
  2. முடி திருத்துவோர் தொழிலாளர் நல வாரியம்
  3. பனைமரத் தொழிலாளர் நல வாரியம்
  4. கைவினைத் தொழிலாளர் நல வாரியம்
  5. கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நல வாரியம்
  6. தோல் பதனிடும் தொழிலாளர் நல வாரியம்
  7. மண்பாண்ட தொழிலாளர் நல வாரியம்
  8. வீட்டுப் பணியாளர் தொழிலாளர் நல வாரியம்
  9. நெசவாளர் தொழிலாளர் நலவாரியம்
  10. சமையல் தொழிலாளர் நல வாரியம்
  11. கிராமிய கலைஞர் நலவாரியம்

இந்த தொழிலாளர் நல வாரியங்களுக்கு ரூபாய் ஆயிரம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் நேற்று அறிவித்தார்.

தொழிலாளர் உதவி ஆணையர் சு.பா சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டு இருப்பது ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் பதிவு செய்து கட்டுமான தொழிலாளர்கள் உடலுழைப்பு தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு நிவாரண உதவியாக ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அந்த தொகையை அந்த அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளதால் வங்கி கணக்கு அளிக்காத நடப்பில் உள்ள தொழிலாளர்கள் உடனடியாக கீழ்கண்ட விவரங்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேவையான ஆவணங்கள் :

  1. தங்களுடைய பெயர்
  2. தொலைபேசி எண்
  3. வங்கி கணக்கு புத்தகம் (தெளிவான முதல் பக்கம்)
  4. நலவாரிய பதிவு எண்
  5. கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அடையாள அட்டை
  6. அமைப்பு சாரா அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அடையாள அட்டையின் முதல் பக்கம்
  7. ஸ்மார்ட் கார்டு எண்
  8. நியாய விலைக் கடை எண்
  9. தற்போதைய முகவரி (ஆதார் அட்டை)

எங்கு எப்படி சமர்ப்பிக்க வேண்டும் :

மேற்கண்ட ஆவணங்களை மின்னஞ்சல் அல்லது whatsaap செய்யலாம்.
மின்னஞ்சல் (E mail) – losssche@gmail.com (சென்னை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம்)

Whatsapp – 7305280011

ஏற்கனவே இந்த விவரங்களை அளித்து அவர்கள் மீண்டும் அளிக்க தேவையில்லை இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(குறிப்பு:தற்பொழுது 1000+1000=2000வழங்கப்படுகிறது )

தற்பொழுது பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பதிவுபெற்ற ஓட்டுனர்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

அமைப்பு சாரா தொழிலார்கள் கொரோனா நிவாரண நிதி பெற என்ன செய்ய வேண்டும்

5 People reacted on this

  1. ஐயாஅவர்களுக்கு வணக்கம்.
    மான்பு மிகு தமிழக முதல்வர் அறிவித்துள்ள₹1000+1000 எப்பொழுது நலநிதிவழங்குவீர்கள் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எங்கு எப்படி வழங்குவீர்கள் என்று தெரிவித்தால் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்க ஏதுவாகும் இருக்கும் என்பதால் தங்களிடம் கேடுக்கொள்கிறைன்.
    நன்றி !
    தங்கள் உண்மையுள்ள
    கே.முத்துக்குமார்.( மாநிலத்தலைவர் )
    தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை.
    பதிவு எண் 3281/CNI.கைபேசி 6380705

    1. வணக்கம் அய்யா,
      1. தற்போது தங்களது ஆவணங்கள் சமர்பித்தவர்களுக்கு அவர்கள் சமர்ப்பித்த வங்கிக்கணக்கில் 2000 ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளது என தெரியவருகிறது.
      2. அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

      தங்களது கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி அய்யா.

  2. ஜயா நான் சமையல் தொழிலாளி என் பெயர் முத்துராமன் ஆவணங்கள் சமர்பித்துவிட்டேன் எனக்கு இன்னும் வரவில்லை

    1. அய்யா, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உங்கள் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அவர்களிடம் இது பற்றிய தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

      தமிழ்நாடு அரசின் செய்தி குறிப்பு.

Leave a Reply